சென்னை, மார்ச் 24 -- சவுக்கு மீடியா நெட்வொர்க் யூடியூப் சேனல் மூடப்படுவதாக , பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார். 'என் தாயின் உயிரை பணையம் வைத்து ஊடகம் நடத்த தயாராக இல்லை' என்றும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, இன்று சவுக்கு மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'இது தான் எங்களின் கடைசி வீடியோ' என்றும், அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

மேலும் படிக்க | Savukku Shankar: 'சாப்பிடும் டேபிளில் மலம்! வீடு தாக்குதலுக்கு இந்த 2 பேர்தான் காரணம்!' சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!

''கடுமையான சூழலில் நான் இந்த சேனலை நடத்தி வருகிறேன். முந்தைய வழக்குகளில் என் வங்கி கணக்குகள் மூடக்கப்பட்டுள்ளது. என் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள அலுவலகத்தை காலி செய்ய அழுத்தம் தரப்படுகிறது. வீடு கிடைக்காமல் இப்போது தான் 3 மாதத...