இந்தியா, மார்ச் 26 -- சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 குற்றவாளிகள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்துள்ளனர். போலீஸ் வசமிருந்த வழக்கு, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள், செல்வா, கல்யாண், விஜய், பாரதி மற்றுமு் தேவி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் எடுத்துள்ள இந்த கைது நடவடிக்கையை 'மக்களை ஏமாற்றும் செயல்' என சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சவுக்கு சங்கர், 'அன்புள்ள தமிழக காவல்துறையே, வாணி ஸ்ரீ, ஜெயக்குமார், ஒய்சி ராகவன், ராயபுரம் மணி, நுங்கை சீனிவாசன் ஆகியோர் தான் உண்மையான குற்றவாளி, அவர்கள் குற்றம் நடந்த இடத்தில் இருந்தார்கள். தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள்' என்ற...