இந்தியா, ஏப்ரல் 3 -- தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் சீனியர் அதிகாரிகளை தவிர்த்து டேவிட்சன் தேவாசிர்வாதத்தை டிஜிபி பதவிக்கு கொண்டு வர சதி நடப்பதாக பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழகத்தின் காவல்துறை இயக்குநராக இருக்கும் சங்கர் ஜிவால் வரும் 31.08.2025 அன்று ஓய்வு பெறுகிறார்.

அவருக்கு அடுத்து (1) திருமதி சீமா அகர்வால், (2) திரு. ராஜீவ் குமார் மற்றும் (3) திரு. சந்தீப் ராய் ராத்தோர் ஆகிய மூவரில் ஒருவர் தலைமை இயக்குநர் பொறுப்புக்கு வர வேண்டும்.

இவர்களில் யார் வந்தாலும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2027 ஜூன் வரை குறிப்பாக சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் டிஜிபியாக இருப்பார்கள்...