இந்தியா, மார்ச் 24 -- என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் காரணம் என யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று காலை 9.30 மணிக்கு அலுவலகத்திற்கு செல்லும் போது என் வாகனத்தின் மீது கல் எறிந்தார்கள். என் அம்மாவிடம் போனில் பேசிக் கொண்டு இருக்கும்போதே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் அளித்தேன். என் அம்மாவின் போனை பிடிடுங்கி என்னிடம் வீடியோ கால் பேசினர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் அவர்கள் துப்புரவு தொழிலாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி உடன் 230 கழிவுநீர் சுத்திகரிப்பு வ...