இந்தியா, ஏப்ரல் 10 -- பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் மீது 15 புதிய வழக்குகளை கோவை சைபர் க்ரைம் போலீசார் பதிவு செய்து உள்ளனர்.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி கோவை, சென்னை, திருச்சி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இதனிடையே தன் மீது பதியப்பட்ட 16 வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்றக் கோரி சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கடந்த பிப்ரவரி மாதம் இது தொடர்பான விசாரணை நடந்தது. அதில் ஒரு வழக்கை தவிர மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த நிலையில் வெவ்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட 15 வழக்குகளும் கோவை சைபர் க்ரைம் காவல...