இந்தியா, மார்ச் 26 -- சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 குற்றவாளிகள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்துள்ளனர். போலீஸ் வசமிருந்த வழக்கு, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்களை இழிவாக பேசியதாகக் கூறி, பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் வீட்டில் துப்புரவுப் பணியாளர்கள் என்று கூறி திரண்டு வந்த கும்பல், மலம் உள்ளிட்ட கழிவுகளை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் சவுக்கு சங்கரின் தாய்க்கு மிரட்டில் விடுத்து, அராஜகத்தில் ஈடுபட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சவுக்கு சங்கர் தயார் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | 'மலம் வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கப்பட்டும்'.. சவுக்கு சங்கருக்கு சவால் விட...