இந்தியா, பிப்ரவரி 10 -- டிக்கிலோனா படத்தை இயக்கியதின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக். இவர் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2 ஆம் தேதி வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி.

மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதில் இடம் பெற்று இருந்த வசனம் பெரியாரை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து அது யார் மனதையும் புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டதில்லை என்று சந்தானம் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்தப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட சந்தானம் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார்.

அந்த நிகழ்ச்சியில் ...