இந்தியா, மார்ச் 16 -- சனி - செவ்வாய் கிரக சேர்க்கை என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் bhakthi infinity யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'கிரக சேர்க்கையில் இருப்பதிலேயே மிகவும் சிறப்பான கிரக சேர்க்கை சனி, செவ்வாய் சேர்க்கைதான். அதே நேரத்தில், மிகவும் மோசமான கிரக சேர்க்கையும் அதுதான்.

பெரிய நிறுவனங்களை நீங்கள் சனி, செவ்வாய் சேர்க்கை உறுதுணை இல்லாமல் நிறுவ முடியாது. அதே போல, கனரக வாகனங்களை சனி- செவ்வாய் சேர்க்கை அனுமதி இல்லாமல் நீங்கள் இயக்க முடியாது. பிரமாண்டமான சொத்துக்கள் உள்ளிட்டவற்றை நீங்கள் சனி சேர்க்கை இல்லாமல் வாங்க முடியாது.

மேலும் படிக்க: செவ்வாய்: குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னி.. ஆசைப்பட்ட பரத்துவாச முனிவர்.. பிறந்தார் செவ்வாய்.. வளர்த்தார் ப...