இந்தியா, பிப்ரவரி 14 -- Samuthirakani: அது விஜயகாந்த் அண்ணனிடம் இருந்து பிரிந்த சமயம்; இப்ராஹிம் சார் உன்னைச்சரணடைந்தேன் பார்த்திட்டு தேம்பி தேம்பி அழுதார் என சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியிடம் ஆவுடையப்பன் சினி உலகம் யூட்யூப் சேனலுக்காக நடத்திய நேர்காணலின் தொகுப்பினைக் காணலாம்.

அதில், 'அப்பா மற்றும் சாட்டை பார்த்துவிட்டு உங்களை நெகிழவைத்த ரெஸ்பான்ஸ் பற்றி சொல்லுங்க?

முதலில் சத்தியமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் பிரேயரில் தலைமையாசிரியர் அப்பா படத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார், இதை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து பார்த்திட்டு என்கிட்ட சொல்லணும்னு சர்க்குலர் விட்டிருக்கிறார். அந்த சர்க்குலர் எனக்கு வருது. அப்ப தான் நினைச்சேன். நாம் எதற்கு வந்தோம் என்று. இன்னும் என் ஊரில் வீட்டிற்குப...