இந்தியா, பிப்ரவரி 6 -- சாம்சங் இந்தியா நிறுவனத்தில் 3 ஊழியர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்ததாக கூறி நேற்று (பிப்ரவரி 5) முதல் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி தொழிற்சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஊதிய உயர்வு, தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர் ந...