இந்தியா, பிப்ரவரி 18 -- நமது வீட்டில் தினமும் அடிக்கடி செய்யப்படும் ஒரு சமையல் வகை என்றால் அது சாம்பார்தான். காலை வேளையில் சாம்பார் செய்தால் அதையே இட்லி, தோசை மற்றும் சாதம் என எல்லாவற்றிற்கும் வைத்து சாப்பிட்டு விடலாம். ஆனால் நாம் வீட்டில் செய்யும் சாம்பாரை விட , கல்யாண வீட்டு விசேஷங்களுக்கு சென்றால் அங்கு செய்யப்படும் சாம்பார் அதிக சுவையுடன் இருக்கும் மேலும் வீட்டில் உள்ளவர்களும் விருந்து சாப்பாடு என்றால் மிகவும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் நாம் வழக்கமாக செய்யும் சமையல்கள் அவர்களுக்கு சலித்து போயி இருக்கலாம்.

இதுபோல விருந்தில் சமைக்கப்படும் உணவை போல் நமது வீட்டில் சமைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சிலருக்கு அந்த சமையல் முறை தெரியாமல் இருப்பதே அதன் முக்கிய காரணம். அதற்காகத்தான் கல்யாண வீடுகளில் செய்யப்படும் சாம...