Hyderabad, பிப்ரவரி 5 -- சமந்தா சினிமாவில் மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல தடைகளை கடந்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார். இந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ஆவார். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, அவர் பல நிகழ்ச்சிகளில் தோன்றும் போது சற்று சோர்வாக தோன்றினார். மேலும் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். மன ஆரோக்கியத்தை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சமந்தா தனது இன்ஸ்டா கணக்கில் அவ்வப்போதுபதிவிட்டு வருகிறார்.

சமந்தா தனது மன அமைதியை பராமரிக்க தியானம் செய்வதாக கூறுகிறார். மேலும் தியானம் மனதையும் உடலையும் அமைதிப்படுத்த உதவுகிறது. தியானம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகளையும் குறைக்கிறது என்று சமந்தா விளக்குகிறார். மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் தாக்க நோயுடனான தனது ...