இந்தியா, பிப்ரவரி 1 -- கேரள மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ராகிங்கால் தற்கொலை செய்து கொண்ட மிஹிர் அகமதுவின் தாய் பதிவிட்ட பதிவு குறித்து, சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கேரள மாநிலம் திருப்புனித்துராவில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 15 வயதான மிஹிர் அகமது படித்து வந்தார். இந்த நிலையில் அவர் சக மாணவர்களால் ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், இந்த கொடுமை தாங்க முடியாமல் அவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து மிஹிர் தாயார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அதில் அவர், சகமாணவர்கள் ராகிங் என்ற பெயரில் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதாகவும், தன்னுடைய மகனை கழிப்பறை இருக்கையை கட்டாயப்...