இந்தியா, ஏப்ரல் 17 -- தென் இந்தியா சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா, நடிப்பு தவிர யோகா, குதிரையேற்றம் உள்பட பல்வேறு தனி திறமைகளை கற்றவராக இருந்து வருகிறார். மற்ற நடிகைகள் போல் உடல்பயிற்சி மீது தீவிர கவனம் செலுத்தி வருபவராக இருந்து வரும் சமந்தா அதுதொடர்பான விடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து லைக்குகள் குவித்து வருபவராக உள்ளார்.

இதையடுத்து சமந்தாவின் லேட்டஸ்ட் பக்கெட் லிஸ்டாக கிக் பாக்ஸிங் பயிற்சி இணைந்துள்ளது. அதன்படி கிக் பாக்ஸிங்கில் தீவிர பயிற்சியில் ஈடுபடும் அவர், அதன் விடியோவை ஸ்டேட்டஸாக தனது இன்ஸ்டாவில் வைத்துள்ளார்.

தனது பயிற்சியாளருடன் கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபடும் சமந்தா, பயிற்சியாளர் சொல்லி கொடுத்த மூவ்மெண்ட்களை பக்காவாக செய்கிறார். அதில் , "ஒரு நாள், ஒரு சமயத்தில்" என குறிப்பிட்டுள்ளார்.

மயோசிடிஸ் என்ற அரிய...