இந்தியா, மார்ச் 15 -- தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா, நடிப்பு தவிர பிட்னஸ் குறித்த போட்கேஸ்ட் செய்து வரும் இவர், பிரத்யூஷா என்ற அறக்கட்டளை மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ ஆதரவையும் வழங்கி வருகிறார். இதையடுத்து நடிகை சமந்தா சினிமாவில் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

த்ரலாலா நகரும் படங்கள் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் சமந்தா, தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் முதல் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் சமந்தா, சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் முறையாக சுபம் என்ற பெயரில் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்...