இந்தியா, மார்ச் 24 -- Salman Khan: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'சிகந்தர்'. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் கான் அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மேலும் படிக்க: கன்னட சினிமாவை புறக்கணிக்கிறாரா ராஷ்மிகா மந்தனா? தொடரும் குற்றச்சாட்டுகள்

அப்போது, 59 வயதான சல்மான் கானுக்கும் 28 வயதான ரஷ்மிகா மந்தனாவுக்கும் இடையேயான வயது வித்தியாசம் படத்தின் மீது பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது என சல்மான் கான் கூறி அதற்கு பதிலளித்தார். அப்போது, இந்த விஷயத்தில் ரஷ்மிகாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென்றால், மற்றவர்களுக்கு ஏன் பிரச்சனை என்று கேள்வி ...