இந்தியா, மார்ச் 16 -- ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரிழப்பு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஏ.ஆர். ரஹ்மான் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவர் வழக்கமான பரிசோதனைகளுக்கு பின் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது மனைவியான சாய்ரா பானு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஏ.ஆர். ரஹ்மான் விரைவில் பூரண நலம் பெற வேண்டும். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது எனவும் தகவல் கிடைத்தது. ஆனால் கடவுளின் ஆசீர்வாதத்தால் ...