இந்தியா, மார்ச் 25 -- Saindhavi: பிரபல இசையமைப்பாளரான ஜிவிபிரகாஷ் குமாரும், சைந்தவியும் விவாகரத்து செய்து வாழ விரும்புவதாக கடந்த வருடம் தெரிவித்தனர். அவர்களது இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரான அவர்கள், தாங்கள் பிரிவதில் உறுதியாக இருப்பதாக கூறினர். தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள், ஒன்றாக காரில் சென்றனர். அவர்களது இந்த நடவடிக்கை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பலரும் சைந்தவி எப்படி இப்படி புரிதலோடு நடந்து கொள்கிறார் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். இந்த நிலையில், வாழ்க்கையின் பிரச்சினைகளை தான் பார்க்கும் கோணம் குறித்து சைந்தவி கடந்த 10 மாதங்களுக்கு முன்னால் கலாட்டா பிங்க் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்தப்பேட்டியை இங்...