இந்தியா, பிப்ரவரி 18 -- Sai Pallavi: கடந்த ஆண்டு 'கார்கி' படத்திற்காக சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சென்றது. இதற்கு சோசியல் மீடியாவில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு நித்யா மேனன் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சாய் பல்லவி, கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு தேசிய விருது வாங்க ஆசைப்படுவதற்கான காரணத்தை பகிர்ந்திருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், "நான் எப்போதும் தேசிய விருதை வாங்க விரும்பி இருக்கிறேன். காரணம், எனக்கு 21 வயதாக இருந்தபோது, என் பாட்டி எனக்கு ஒரு சேலையைக் கொடுத்து, இதை உன் திருமணத்திற்கு கட்டிக்கொள் என்றார்.

அந்த நேரத்தில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்று, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வி...