இந்தியா, மார்ச் 13 -- Sai Pallavi: பிரபல நடிகை சாய் பல்லவி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள மேல் அனையட்டி படுகர் கிராமத்தில் நடைபெற்ற தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். திருமணத்தில் இசைக்கப்பட்ட பேண்டு வாத்தியத்திற்கு உறவினர்களுடன் சேர்ந்து உற்சாக நடனமாடியிருக்கிறார்.

திருமண விழாவில் சாய் பல்லவி நடனமாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அந்த வீடியோவில் சாய் பல்லவி, அசத்தலாக நடனமாடி மணமகனை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

திருமண இசைக்குழு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், சாய் மற்றும் அவரது சகோதரி பூஜா கண்ணன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பாரம்பரிய படுகர் நடனத்தின் மாறுபாட்டைச் செய்கிறார்கள். இசைக்குழு இசைக்கும்போது, பூஜாவுடனும் மற்ற பெண்களுடனும் நடனமாடும் போது சாய் மிகுந்த மக...