இந்தியா, பிப்ரவரி 13 -- Zodiac signs: நவகிரகங்களில் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் குரு பகவான். இவர் நவகிரகங்களில் மங்கள கிரகமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் என அனைத்து செல்வங்களுக்கும் காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குருபகவான் ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.

இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில்...