இந்தியா, மே 2 -- RIPUmaRamanan: பிரபல பாடகியான உமா ரமணன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 72; இந்த நிலையில், அவரது கணவரும், பாடகருமான ஏவி ரமணன், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், " வணக்கம் நான் ஏவி ரமணன் பேசுகிறேன். என்னுடைய மனைவியான உமாரமணன் நேற்று மாலை 7.45 மணியளவில், இறைவனடி சென்றார்கள். அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மகனும் இதை எதிர்பார்க்கவில்லை.

இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் மீடியா நண்பர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, உமா ரமணனின் ஆசை இது." என்று பேசி இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, ச...