இந்தியா, மார்ச் 25 -- பாரதிராஜாவின் மகனும், நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று (25 -03-2025) காலமானார். அவருக்கு வயது 48. இவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முன்னதாக லிட்டல் டாக்ஸ் சேனலுக்கு பேட்டிக்கொடுத்த மனோஜ் பாரதிராஜா வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேசி இருந்தார். அந்தப்பேட்டியை இங்கே நினைவுகூறலாம்.

மேலும் படிக்க | Manoj Bharathiraja: 'ஈச்சி எலுமிச்சி..' தொலைந்து போன கனா..பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்!

அதில் அவர் பேசும் போது, 'இந்த இடத்தில் நான் டைரக்டராக உட்கார்ந்து இருக்கிறேன். இதற்கு பலர் காரணமாக இருக்கலாம். ஆனால் மூலக்காரணம் என் மனைவிதான். என்னை சுமந்து வந்த ஜீவன் அவள்.

உண்மையில் என்னுடைய கஷ்டம் அனைத்தையும் என்னுடைய மனைவி எடுத்துக்கொண்டாள் எ...