இந்தியா, ஏப்ரல் 9 -- காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த எம்.பி., வசந்தகுமாரின் அண்ணனும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் செவ்வாய்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தன் தந்தையின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.... மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... என்று குமரி அனந்தன் மறைவுக்கு தமிழிசை செளந்தரராஜன் உருக்கமாக கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்...