இந்தியா, ஏப்ரல் 9 -- காங்கிரஸ் மூத்த தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் 93 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். வயது முதிர்வு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் காலமானார்.

குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர். சுதந்திர போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதியின் மகனான இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. கிருஷ்ணகுமாரியை என்பவரை துணைவியாக கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். தற்போதைய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தராஜனும் இவரது மகள் ஆவார். இவர் மறைந்த தொழிலதிபரும் முன்னாள் எம்.பியுமான எச்.வசந்தகுமாரின் அண்ணன...