இந்தியா, ஏப்ரல் 9 -- காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த எம்.பி., வசந்தகுமாரின் சகோதரரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் செவ்வாய்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 93. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை செளந்தரராஜன் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்ககளால வயது முதிர்வு பிரச்னையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மே...