இந்தியா, பிப்ரவரி 5 -- Richest Actor: தென்னிந்திய திரைப்படத் துறைகள், பாலிவுட்டின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்து வந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படத் துறைகள், பாக்ஸ் ஆபிஸில் பாலிவுட் திரைப்படங்களை தொடர்ச்சியாக வென்றுள்ளன.

இதனால் தென்னிந்திய நட்சத்திரங்களின் அந்தஸ்தும் அதிகரித்துள்ளது. சிலர் தற்போது அதிக சொத்துகளை வைத்திருப்பதால் பல முன்னணி பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தென்னிந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நட்சத்திரமாக உள்ள ஒருவர் பாலிவுட்டின் பெரும்பாலான நட்சத்திர நடிகர்களை விடவும் பணக்காரர் என்பது தெரியுமா உங்களுக்கு?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா அக்கினேனி தான் தற்போது தென்னிந்தியாவின் மிகப் பணக்கார நடிகர்...