இந்தியா, மார்ச் 22 -- மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தென்னிந்தியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவோம் என தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

நாடு இன்று பெரும் சவாலை எதிர்கொண்டு உள்ளது. பாஜக, மக்கள்தொகை அடிப்படையிலான தண்டனைக் கொள்கையை செயல்படுத்தி வருகிறது. 1971-ஆம் ஆண்டு இந்தியா குடும்பக் கட்டுப்பாட்டை தேசிய முன்னுரிமையாக ஏற்றபோது, தென்னிந்தியா இதில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால், வட இந்தியாவின் பெரிய மாநிலங்கள் தோல்வியடைந்தன.

தென்னிந்திய மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன. அதிக உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறந்த உள்கட்டமைப்பு, ஆளுகை மற்றும் சமூக நலத்திட்டங்களில் தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

தேசிய பொருளாதாரத்திற்கு அதிகம் ...