இந்தியா, ஜனவரி 26 -- சென்னையின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர காவல்படை, நீலகிரி படை பிரிவுகள், தமிழ்நாடு அஞ்சல் பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் பிற படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. காவல்துறை, சமூகசேவை, வீரதீர செயல்களுக்கான விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு துறைகளின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்த்திகளின் ஊர்வலமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரை நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகள் மீது ஆளுநர் தொடர் வ...