இந்தியா, டிசம்பர் 8 -- நமது நாட்டைப் பொறுத்தவரைத் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய சடங்காகப் பார்க்கப்படுகிறது. பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து தனது சந்ததிகளுடன் வாழ வேண்டும் என்பதை விரும்புகின்றனர். இந்த மிகப்பெரிய சடங்காகக் கூறப்படும் திருமணம் என்பது சில தடைகள் காரணமாகக் காலதாமதம் ஆகின்றது.

திருமணத்தடையைப் பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்யலாம் என ஆன்மீகம் கூறுகிறது. சில முறையான பரிகாரங்கள் மூலம் இந்த திருமணத்தடையை நிவர்த்தி செய்யலாம். அவ்வாறு செய்யக்கூடிய பரிகாரங்கள் குறித்து இங்கே காண்போம்.

சனி தோஷ பரிகாரம்

நீதிமானாக விளங்கும் சனி பகவான், பாவங்களுக்கு ஏற்றவாறு பலன்களைத் தரக்கூடியவர். அந்த வகையில் சனி தோஷத்தால் சிலரது திருமணம் காலதாமதம் ஆகிறது. அவ்வாறு சனி தோஷத்தால் திருமண யோகம் தாமதமாகக் கூடியவர்கள் தான தர்மங்கள் ...