இந்தியா, ஏப்ரல் 5 -- மனதளவில் வலுவாக உள்ள மக்கள் சில பழக்கங்களை பழகிக்கொள்வார்கள். அது அவர்களின் வாழ்க்கையை சிறப்பான முறையில் நகர்த்திச் செல்ல உதவும். நீங்கள் மனதளவில் வலுவான நபர் என்றால் உங்களிடம் இந்தப் பழக்கம் இருக்கும். இல்லாவிட்டாலும் நீங்கள் இந்த பழக்கங்களை பழகிக்கொண்டு மனதளவில் வலுவான நபராக மாறிவிடுங்கள்.

மனதளவில் வலுவானவர்கள் தங்களுக்கு கிடைத்தவை குறித்து நன்றியுடன் நடந்துகொள்வார்கள். அவர்கள் மற்றவர்களிடம் உள்ளது தங்களிடம் இல்லை என்று, இல்லாதது குறித்து வருந்திக்கொண்டு இருக்கமாட்டார்கள். தங்களிடம் உள்ளவை அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

அவர்கள் தங்களின் தனிப்பட்ட சக்தியைக் கொண்டு எதிர்மறை எண்ணம் கொண்ட மக்கள், தங்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். மற்றவர்கள் எதிர்மறையாகப் பேசினாலும் இவர்கள் அதற்கு பலியாக மாட...