இந்தியா, மார்ச் 17 -- Relationship : ஒரு காதல் அல்லது திருமண உறவில் சண்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஏனெனில், ஒருவரைப்போல் மற்றொருவர் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர். தனியான குணங்கள் கொண்டவர். ஒருவருக்கு பிடித்த விஷயம் மற்றவருக்கு பிடிக்காது. ஒருவரின் விருப்பங்கள் வேறாக இருக்கலாம். எனினும் இவர்களை இணைப்பது அன்பாக இருக்கும். ஒரு உறவில் அந்த அன்பு எப்போது குறைகிறது. புரிதல் இல்லாதபோதுதான் அன்பு குறைகிறது. எனவே ஒருவருக்கு புரிதல் ஏற்பட என்ன செய்யவேண்டும்.

ஒரு உறவில் சண்டை ஏற்படுவதற்கான காரணிகள் என்னவென்று பாருங்கள். உங்களுக்கு என்ன பிடிக்கும்? உங்கள் பார்ட்னருக்கு என்ன பிடிக்கும் என்று பாருங்கள். எந்தச் சூழல் சண்டையை உருவாக்குகிறது என்று பாருங்கள்.

அவர்கள் உங்கள் பார்ட்னர் என்பதை மனதில்கொள்ளுங்கள். உங்களையும், பிரச்ன...