இந்தியா, பிப்ரவரி 17 -- உளவியல் குறிப்புகள், உங்களுக்கு மக்களுடன் தொடர்புகொள்ளவும், அவர்களுடன் தொடர்ந்து நல்ல உரையாடல் மற்றும் தொடர்பில் இருப்பதும் மிகவும் கடினமாக உள்ளதா? இங்கு உங்களுக்காக சில உளவியல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அது மற்றவர்களை எளிதாக சமாதானப்படுத்தவும், அவர்களை புரிந்துகொள்ளவும் உதவுபவையாகும். அவை என்னவென்று தெரிந்துகொண்டு உறவுகளிடம் ஏற்படும் சிக்கல்களில் இருந்து வெளிப்படுங்கள்.

யாராவது உங்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தால், அவர்களும் அதையே திரும்பி எதிர்பார்ப்பார்கள் என்று பொருள். அதோபோல் ஒருவருக்கு நீங்கள் நல்லது செய்யும்போது, அவர்களும் அதையே செய்யவேண்டும் என்று கருதுகிறீர்கள். அன்பு காட்டுவது, உதவுவது போன்ற சிறிய விஷயங்களில் கூட இந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

மக்கள் வல்லுனர்களை நம்புகிறார்கள். நீங்கள்...