இந்தியா, ஏப்ரல் 8 -- அலுவலகத்தில் உங்களுடனே பணிபுரிந்துகொண்டு உங்களிடம் நண்பர்களாக நடித்துக்கொண்டு, உங்களுக்கு எதிராக செயல்படும் நபர்களை அடையாளம் காண்பது எப்படி என்று பாருங்கள்.

உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களிடம் நல்ல முறையில் நடந்துகொண்டாலும், அவர்கள் அனைவரும் உங்கள் மேல் நல் மதிப்பு கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள். ஃப்ரினிமி என்பவர் உங்கள் பணியிடத்தில் உங்கள் நண்பர்களைப்போல் நடித்துக்கொண்டு, உங்களுக்கு எதிரான செயல்களை செய்துகொண்டிருப்பார். அவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று பாருங்கள்.

அவர்கள் உங்களை அடிக்கடி பாராட்டுவார்கள். ஆனால், அதில் மறைந்திருக்கும் பொருள், உங்களின் கோணம் குறித்து உங்களை கேள்வி எழுப்பச் செய்யும். இந்த நிலை உங்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் தோன்றினாலும் உங்களை தாழ்த்தும். இது அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வால் ஏற்படுவத...