இந்தியா, பிப்ரவரி 14 -- அலுவலகத்தில் அனைவரும் மதிக்கும் அதிகாரியாக வேணடுமெனில், உங்களுக்கு இந்தப் பழக்கங்கள் மிகவும் அவசியம். எவ்வாறு மரியாதையான பணியாளராக நீங்கள் இருக்கவேண்டும் என்பதற்கு இங்கு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நேர்மையாக இருப்பது முதல் சிறப்பான முறையில் உரையாடுவது வரை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று பாருங்கள். மற்றவர்களைவிட உங்களை தனித்து தெரியவைக்கும் மரியாதையான அதிகாரியாக உங்களை மாற்றும் விஷயங்கள் என்னவென்று பாருங்கள்.

நேர்மை என்பது உங்கள் பணி மற்றும் வாழ்க்கை இரண்டுக்கும் முக்கியமானது. சிறந்த அறநெறிகளை நீங்கள் கைகொள்ளவேண்டும். இது உங்களின் பணியிடத்தில் உங்களுக்கு தேவையான மரியாதையைப் பெற்றுத்தரும்.

மற்றவர்களின் நேரத்தை மதிப்பவர்களாக மரியாதையாக உயர் அதிகாரிகள் இருப்பார்கள். இவர்கள் காலக்கெடுக்களுக்க...