இந்தியா, பிப்ரவரி 7 -- உங்கள் உறவுகளை உன்னதமாக்க வேண்டுமென்றால் நீங்கள் இந்த இடத்தில் நீங்கள் அமைதியைக் காக்கவேண்டும். சில இடங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனமான ஒன்றாக இருக்கும். நீங்கள் உங்களைச் சுற்றியும் அதிகம் பேசக்கூடிய நபர்களை வைத்துள்ளீர்கள் என்றால், நீங்கள் அங்கு பின்பற்றவேண்டிய சக்தி வாய்ந்த ஆயுதமாக அமைதி இருக்கட்டும். சில இடங்களில் பேசுவது அல்லது ஒரு சூழலை விளக்குவது உங்களுக்கே சிக்கலாக வந்துவிடும். நீங்கள் எப்போது அமைதி காக்கவேண்டும் என்பதைப் பாருங்கள்.

உங்களின் கருத்து எங்கு தேவையில்லையோ அல்லது முக்கியமில்லையோ அங்கு நீங்கள் அமைதி காப்பது சிறப்பு. மற்றவர்களிடம் தேவையான மற்றும் முக்கியமான தகவல்கள் இருந்தால் அங்கு நீங்கள் அமைதி காப்பதே சிறந்தது. நீங்கள் அமைதியாக இருந்தால் அது உங்களுக்கு நல்லது. இது நீங்கள் அவர்களுக்க...