New Delhi, பிப்ரவரி 20 -- Rekha Gupta : டெல்லி சட்டசபைக்கு கடந்த, பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 70 இடங்களில் 48 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதன் வாயிலாக, 27 ஆண்டுக்குப் பின் டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா நடந்தது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். இவருக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் டெல்லியின் 4ஆவது பெண் முதல்வர் ஆனார்.

இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சரும் கட்சித் தலைவருமான ஜெகத் பிரகாஷ் நட்டா, பாஜக தலைமையிலான மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் மற்று...