இந்தியா, பிப்ரவரி 4 -- மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவர் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசும்போது, "டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர் "இந்தப் படத்தில் வேறொருவி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் சார் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது". என்று பேசினார்.

அஜர்பைஜான் நாட்டின் கிளைம...