இந்தியா, ஜனவரி 31 -- தமிழ் நடிகையான ரெஜினா காஸண்ட்ரா தென் இந்திய சினிமாக்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பதுடன் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இதையடுத்து தென்னிந்திய சினிமா நடிகர், நடிகைகளின் தேவை பாலிவுட்டினருக்கு அவசியமானதாகிவிட்டதாக பேட்டி ஒன்றில் நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக நடிகை ரெஜினா CNN-நியூஸ் 18 ஷோஷாவில் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த பேட்டியின் அவர் கூறியதாவது, "சமீப காலமாக பாலிவுட் சினிமாக்களில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் அதிகம் தலை காட்டி வருகிறார். அதேபோல் பாலிவுட் ரசிகர்களின் ரசனையும் தென்னிந்திய சினிமாக்களின் மீது அதிகரித்துள்ளதால், இந்த படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.

இப்போது, ​​பாலிவுட்டினருக்கு வேறு வழியில்லை. முன்பெல்லாம் ரொம்பவே ஆணவ மனப்பான்மையுடன் இருந்தார்கள். நீங்கள...