இந்தியா, ஜனவரி 29 -- உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடந்து வருகின்றன. சக்கரத்தில் தொடங்கி இப்போது நாம் பயன்படுத்தி வரும் ஏஐ தொழில்நுட்பம் வரை மனிதன் அவனது வசதிக்காக உருவாக்கி வருகிறான். ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி வரும் பல தொழில்நுட்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இல்லை. இப்பொழுது நாம் அந்த சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வருகிறோம். இது போல கண்டறியப்பட்டது தான் போன்கள். தொலைதூரத்தில் இருப்பவர்களை தொடர்பு கொண்ட பேச கண்டறிந்த இந்த சாதனம் நாள்போக்கில் மேம்பட்டு வருகிறது. தற்போது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் நமக்கு பல விதங்களில் உதவுகிறது. இத்தகைய பலன்களை கொடுக்கும் ஸ்மார்ட் போன்கள் தான் நமக்கு மிகப்பெரிய ஆபத்து என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அந்த அளவிற்கு நாம் அதனை முறையில்லாமல் பயன்படுத்தி வருகிறோம்...