இந்தியா, பிப்ரவரி 16 -- நமது வீடுகளில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் அதன் முதல் கொண்டாட்டமே கேக் வெட்டுவது தான். இப்போது கேக் வெட்டுவது என்பது எழுதப்படாத ஒரு விதியாகி விட்டது. அதிலும் தெருக்கள் தோறும் பெருகி வரும் பேக்கரிகளால் நாம் அடிக்கடி கேக் சாப்பிடுகிறோம். ஆனால் இந்த கேக்குகள் மொத்தமாக ஃபேக்டரிகளில் செய்யப்படுவதால் சுத்தமாக இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. இதற்கு மாற்றாக நாமே வீட்டிலேயே கேக் செய்தால் அதன் சுத்தம் பாதுகாக்கப்படும். வீட்டிலேயே எளிமையாக ரெட் வெல்வெட் கேக் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

ஒரு கப் மைதா மாவு

அரை கப் உப்பு இல்லாத வெண்ணெய்

3 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர்

2 கப் அரைத்த சர்க்கரை

3 முட்டை

ஒரு டீஸ்பூன் வினிகர்

ஒரு டீஸ்பூன் செர்ரி ரெட் கலர்

2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்

உப்பு

பட்டர் பேப்பர்

அரை சீஸ் க்ரீம்

ம...