இந்தியா, மார்ச் 31 -- தலை முடி உதிர்வை தடுக்க இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக சிவப்பு பாமயில் இருந்து. தலை முடி ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கும் சிவப்பு பாமாயில், தலைமுடியை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எலெய்ஸ் கினீன்சிஸ் மரத்தின் பழத்திலிருந்து பெறப்பட்ட இயற்கை எண்ணெய் தான் சிவப்பு பாமாயில் ஆகும். இந்த பழம் சிவப்பு நிறத்தில் உள்ளது. இதில் எலைகோபீன், ஆல்பா கரோட்டின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் உள்ளன. இதன் காரணமாகவே சிவப்பு நிறத்தை பெறுகிறது.

சிவப்பு பாமாயில் தலைமுடியை அதிக மென்மையாக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. தலைமுடியை லூப்ரிகேட் செய்து, உச்சந்தலையில் எரிச்சலைக் குறைக்கிறது.

சிவப்பு பாமாயில் முடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. இதில் இருக்கும் மிரிஸ்டிக் ...