இந்தியா, மார்ச் 22 -- Red Lorry Flim Festival: பிரபல டிக்கெட் புக்கிங் இணையதளமான 'புக் மை ஷோ' ரெட் லாரி திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த விழா ஹைதரபாத்தின் பிரசாத் மல்டிப்ளஸ் திரையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விழாவை இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான எல்.வி. பிரசாத்தின் மகனும், பிரசாத் ஸ்டியோஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ரமேஷ் பிரசாத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மகளும் பிரசாத் ஸ்டியோஸ் நிறுவனத்தின் இயக்குநனருமான ராதா நல்ல கிருஷ்ணனும் பங்கேற்றார். அவருடன் பேசுவதற்கான வாய்ப்புக்கிடைத்தது.

ரமேஷ் பிரசாத்

அவரிடம் பேசியவற்றிலிருந்து.., 'திரைப்படங்கள் எப்போதுமே ரொம்ப ரொம்ப முக்கியமானவை. எவ்வளவு ஓடிடி தளங்கள் வந்தாலும், தியேட்டருக்குன்னு ஒரு ஜீவன் இருக்கு. தாத்தா தனித்துவமானவர். அவர் வீட்ல இருந...