இந்தியா, மார்ச் 2 -- உலக அளவில் புகழ் பெற்ற உள்ளூர் கால்பந்து கிளப் போட்டிகளில் ஒன்றாக ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து தொடர் இருந்து வருகிறது. இந்த லீக்கில் தற்போது முதல் இடத்தில் பார்சிலோனா உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்து வந்த ரியல் மாட்ரிட் அணி, ரியல் பெடிஸ் அணிக்கு எதிராக பெற்ற அதிர்ச்சி தோல்வியால் புள்ளிப்பட்டியலில் கீழே இறங்கியுள்ளது.

லா லீக் தொடரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டியாக ரியல் மாட்ரிட் - ரியல் பெடிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை, ரியல் பீடிஸ் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியில் முதல் கோலை ரியல் மாட்ரிட் வீரர் பிரஹிம் டியாஸ் ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அடித்தார். அவருக்கு மெண்டி அசிஸ்ட் கொடுத்தார்.

மேலும் படிக்க: ...