இந்தியா, பிப்ரவரி 26 -- தங்க நகை புழக்கம் என்பது தமிழர்கள் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது. நகைகள் அணிவதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு அவசர & எதிர்கால தேவைக்கும் நகைகளை அடகு வைப்பதே பிரதானமாக பார்க்க முடிகிறது. தென்னிந்தியர்களின் பிரதான முதலீடாகவும் தங்க நகைகளே இருந்து வருகின்றன. தனியார் வட்டிக்கடைகள் போன்று அல்லாமல் வங்கிகளில் இருக்கும் பாதுகாப்புத் தன்மைக்காகவும் வெளிப்படைத் தன்மைக்காகவுமே பெரும்பான்மை மக்கள் தங்கள் தேவைகளுக்கு நகைகளை அடகு வைக்க வங்கிகளையே நாடுகின்றனர். இந்த சூழலில் ஆர்பிஐ வைத்த திடீர் கட்டுப்பாட்டின் காரணமாக வங்கிகளும் கடன் வைத்த பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

வங்கிகள் நகையை வைத்து அளிக்கும் கடன்களுக்கு பொதுவாக ஒரு வருட கால அவகாசம் கொடுக்கும். ஒரு வருடத்திற்குள்ளாக நகையை மீட்டோ அல்லது மறுஈடோ செய்து கொள்ள வேண்ட...