இந்தியா, பிப்ரவரி 13 -- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அரசியல் நிலைப்பாடுகளை முன்னாள் அதிமுக எம்.பியும், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவிந்திரநாத் விமர்சனம் செய்து உள்ளார்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் பாராட்டு விழா தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றது.

மேலும் படிக்க: 'எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமே ஈபிஎஸ்!' செங்கோட்டையனுக்கு உதயகுமார் பதிலடி!

இந்த நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர்., மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் என்று புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "மக்கள் சக்தியே மகத்தான சக்தி, மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் ஆயுளையும், எதிர்காலத்தையும் ...