இந்தியா, ஜனவரி 29 -- பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக ஏற்கப்பட்டு இருக்கிறார்.

சர்வதேச புகழ் பெற்ற, உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்கர் அல்லாத, வெளிநாட்டில் வசிக்கும் ஒளிப்பதிவாளர்கள் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது என்பது மிக மிகக் கடினமான ஒன்று. பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்கள் ஒரு ஒளிப்பதிவாளரின் படங்களை பார்த்து, அந்த ஒளிப்பதிவின் தரத்தை சோதித்து, அதைப்பற்றி ஆலோசித்து, அதற்குப் பிறகு தான் கூட்டாக இந்த அங்கீகாரத்தை வழங்குவர் என்பது

தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய பெருமைகளை ஏற்கனவே பெற்றுள்ள ரவிவர்மன், பெரிதும் மதிக்கப்படும் ஏ எஸ் சி உ...