இந்தியா, பிப்ரவரி 19 -- நமது வீடுகளில் காலை நேரம் என்றாலே மிகவும் பரபரப்பான இருக்கும். ஏனென்றால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் என அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டிருப்பார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான காலை உணவை சமைப்பதற்கு பெரும் பாடாகவே இருக்கும். குறிப்பாக நாம் வழக்கமாக வீட்டில் சமைக்கும் சாப்பாடுகள் சில சமயங்களில் வேண்டாம் என குழந்தைகள் அடம்பிடிக்க வாய்ப்பு உண்டு. முந்தைய நாள் இரவே காலை உணவிற்கு தயார் செய்து வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் காலை உணவு செய்யவே முடியாது இட்லி தோசை போன்ற உணவுகளுக்கு முந்தைய நாளே அரிசி ஊற வைத்து மாவு அரைத்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எளிமையாக இட்லி, தோசை சுட முடியும்.

ஆனால் சில சமயங்களில் நம்மால் மாவு அரைக்க முடியாமல் போயிருக்கலாம் அல்லது மாவு புலிக்காமல் இருந்ததிரு...