இந்தியா, பிப்ரவரி 1 -- Rasipalan: ஒன்பது கிரகங்கள் செயல்பாடுகள் பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவைகள் தான் நவகிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த ஒன்பது கிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருபவர். புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

புதன் பகவான் ஒரு மாதத்திற்கும் குறைவாக தனது இடத்தை மாற்றக்கூடியவர். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் புதன் பகவான் கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று மகர ராசிக்கு சென்றார். புதன் பகவானின் மகர ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் புதன் பகவானி...