இந்தியா, மார்ச் 8 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். கிரகங்களின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று சனிபகவான் கும்ப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று சனிபகவான் உதயமாகின்றார். சனி பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு ச...